அபராதத்தை தவிர்க்க மதுபோதை ஆசாமிகள் செய்த செயல்..!

0
287

அபராத்ததை தவிர்க்க காவலர் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வாகன சோதனையின் போது மதுபோதையில் வந்த இருவர் காவலர்கள் மீது காரை ஏற்றியுள்ளனர். இதனால், இரு காவலர்களும் படுகாயமடைந்தனர்.அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், தலைமைகாவலர் விகாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,மற்றொரு காவலர் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் வந்த இருவரும் அபராதம் கட்டுவதை தவிர்ப்பதற்காக காவலர்கள் மீது காரை ஏற்றியதாக தெரிகிறது. இதனை அடுத்து, மதுபோதை ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

தேடுதல் வேட்டையை அடுத்து, டெல்லி துவாரகா நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (31) என்பவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் காவலர்கள் மீது காரை ஏற்றிய சம்பவம் அந்த பகுதி காவலர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா?
Next articleமுதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here