Dry Fruits Milk Shake recipe in Tamil: ஆரோக்கியமான மில்க் ஷேக்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..!

Photo of author

By Priya

Dry Fruits Milk Shake recipe in Tamil: ஆரோக்கியமான மில்க் ஷேக்.. எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்..!

Priya

Dry Fruits Milk Shake recipe in Tamil

Dry Fruits Milk Shake recipe in Tamil: மில்க் ஷேக் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் எண்ணற்ற வகையான மில்க் ஷேக் உள்ளன. ஐஸ்கிரீம் மில்க் ஷேக், பழங்களில் மில்க் ஷேக் என்று பலவிதமான மில்க் ஷேக் உள்ளன. இந்த மில்க் ஷேக்கை அனைத்து வயதினரும் விரும்பி குடிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானமாகும். நாம் இந்த பதிவில் சத்தான, ஆரோக்கியமான நட்ஸ் ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது (How to make Dry Fruits Milk Shake recipe in Tamil) எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பாதாம் – 5
  • முந்திரி – 5
  • பிஸ்தா -5
  • வால்நட் – 2
  • பேரிச்சம்பழம் – 5
  • அத்திப்பழம் -2
  • காய்ந்த திராட்சை – 5
  • பால் – 1 கிளாஸ்
  • தேன் – 3 தேக்கரண்டி

செய்முறை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், பேரிச்சம்பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை முதல் நாள் இரவு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவும்.

மறுநாள் காலையில் பாதம் தோலை உரித்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு மிக்ஸியில் ஊறவைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான ஆரோக்கியமான நட்ஸ் ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்  தயார்.

மேலும் படிக்க: ABC Juice குடிப்பவரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம குடிக்காதீங்க..!