வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
79

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வருகின்ற ஏழாம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு வரும் எட்டாம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு வரிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் அதற்கான வாய்ப்பிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான நேரங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

வருகின்ற 6ம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக் கூடிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை சமயங்களில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு எதுவுமில்லை, இன்று குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாளை குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது, அதாவது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் இந்த பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.