தனது ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு கொடுத்த டி.எஸ்.பி! பாராட்டும் நெட்டிசன்கள்!
அதியாவசிய பொருட்கள் விலை உயர்வால் சாதாரணமான நடுத்தர ஏழை மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.பிறர் நாட்டின் கரன்சியை விட இலங்கையின் கரன்சியை விட பல மடங்கு குறைந்து காணப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் இலங்கை மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் குழந்தைகள் குடிக்க பால் இன்றி தவித்து வருகின்றனர். இந்தியாவும் பெட்ரோல், கோதுமையை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். முதலமைச்சரும் இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக கொடுத்து வருகின்றது. இந்நிலையில் ஈரோடு டி.எஸ்.பி. சண்முகம் தனது ஒரு மாத ஊதியமான ரூ.89 ஆயிரத்து 136-யை இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் கொடுத்துள்ளார் .இத்தனை தமிழக அரசு மாவட்ட போலீஸ் துறை வாயிலாக அனுப்பி வைத்துள்ளனர். இவரது இந்த செயலகளை கண்டு அனைவரும் யாவரை வியந்து பார்க்கின்றனர்..இவரை போலீசார், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.