டிடிவி தினகரன் மகள் திருமணம் ஒத்திவைப்பு! வெளியானது உண்மையான காரணம்

Photo of author

By Sakthi

டிடிவி தினகரன் மகள் திருமணம் ஒத்திவைப்பு! வெளியானது உண்மையான காரணம்

Sakthi

டிடிவி தினகரன் மகள் திருமணத்திற்கு உறவினர்கள் மட்டுமில்லாமல் பல முக்கிய சிறப்பு விருந்தினரையும் அழைத்திருந்தார். டிடிவி தினகரன். திருமணத்திற்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தங்களுக்கு இன்னமும்கூட அதிமுகவின் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக டிடிவி தினகரன் இவ்வாறு திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஊரடங்கு காலம் என்ற காரணத்தால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 பேர் மட்டுமே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சசிகலா உள்பட விஐபிகள் பங்கேற்க இயலாது என்ற காரணத்தால், ஜூன் மாதம் 13-ஆம் தேதி நடைபெற இருந்த திருமணத்தை டிடிவி தினகரன் ஒத்தி வைத்திருப்பதாக தெரிகிறது.

அதோடு கல்வியின் தந்தை என்று டெல்டா மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்களின் பேரன் தான் ராமநாதன் அண்மையில் பூண்டி துளசி அய்யா வாண்டையார் மறைந்த சூழ்நிலையில் திருமணம் தள்ளி போனதற்கு இதுவும் ஒரு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.