திமுக,அதிமுகவை  ஒரே ட்வீட்டில் அதிர வைத்த  டிடிவி! ஆடிப்போன ஸ்டாலின், எடப்பாடி!

தமிழகத்தில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக நிலவி வருவது நீட்  தேர்வும்  அதன் அச்சத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்வதும் ஆகும்.நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:” நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த தீய சக்தியான திமுகவும் அதனை செயல்படுத்திய பழனிசாமி அரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது போல நாடகமாடுகிறார்கள் தவிர நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க மறுப்பதால் தான் இந்த சோகம் தொடர்கிறது.

இனியாவது மக்களை ஏமாற்ற நினைப்பதை விட்டுவிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களை காப்பாற்ற அதிக எம்பிகளை வைத்திருக்கும் திமுகவும் அதிகாரத்திலுள்ள பழனிசாமி அரசும் உண்மையான முயற்சியில் ஈடுபட வேண்டும்” என  டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment