குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

துபாயின் இளவரசனாக திகழும் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். இவர் ஃபாஸ்ஸா என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

இவர் காரில் முன்பக்கத்தில் ஒரு குருவி கூடு கட்டியுள்ளது. இதைப்  பார்த்த இளவரசி அந்தக் காரை  எடுத்துச் செல்லாமல், அங்கே நிறுத்தி வைத்துவிட்டு,அந்தக் குருவிக் கூட்டை யாரும்  தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்தக் குருவிக்கு அந்த காரை பரிசளித்து விட்டார். இவர் பொதுவாக விலங்குகள் பறவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்பு காட்டுவாராம்.

குறிப்பாக இவர் கழுகு, ஆந்தை போன்ற பறவைகள் உடன் பழகும் வித்தியாசமான குணம் உடையவர்.குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர்!! பாரி வள்ளலே!!

நமது தமிழ்நாட்டில் பாரி என்ற மன்னன் முல்லைக்கொடிக்கு தனது தேரையே பரிசளித்தது, “பாரி வள்ளல்” என்று பெயர் எடுத்துள்ளார். அதேபோன்று இந்த காலத்திலும் குருவி கூட்டத்திற்காக தனது  காரையே வழங்கிய துபாய் இளவரசர் ஃபாஸ்ஸா-வின்  செயல் பாராட்டுக்குரியது.

இந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. “முல்லைக்குத் தேர் தந்த  பாரிவள்ளல்” போன்று  “குருவிக் கூட்டைத் காரை தந்த ஃபாஸ்ஸா வள்ளல்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Comment