ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர்!!

Photo of author

By Sakthi

ஸ்பைடர் மேன் படத்திற்கு டப்பிங்! சினிமாவிற்குள் நுழைந்த குஜராத் அணி வீரர்.
அடுத்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ள ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் படத்திற்கு டப்பிங் கொடுத்ததன் மூலமாக சினிமாவில் நுழைந்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்.
2018ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ் என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்குத் தான் தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வரும் சுப்மான் கில் அவர்கள் டப்பிங் கொடுத்துள்ளார்.
ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்திற்கு சுப்மான் கில் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் கொடுத்துள்ளார். இதன் மூலம் சினிமா துறையில் ஒரு நடிகராக இல்லாமல் டப்பிங் கலைஞராக சுப்மான் கில் அவர்கள் நுழைந்துள்ளார்.