மீண்டும் ஆரம்பமாகும் கனா காணும் காலங்கள்!! புதிய சீசனிற்கு தயாராகுங்கள்!!
தமிழில் தற்போது பிரபலமாக உள்ள தொலைக்காட்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. பொதுவாக விஜய் தொலைக்காட்சி என அழைக்கப்படும் பொழுதுபோக்கு ஒளி அலைவரிசை ஆகும். இந்த தொலைக்காட்சி இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த தொலைக்காட்சி உலகின் பல நாடுகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இது 21ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ்ன் உரிமையாளர் ரூப்பர்ட் மர்டாக், ஸ்டார் தொலைக்காட்சி மற்றும் பாக்ஸ் சர்வதேச சேனல்கள் மூலம் இந்த தொலைக் காட்சியை தற்போது நிர்வகித்து வருகிறார். இந்த தொலைக்காட்சி 1994 ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால் விஜய் தொலைக்காட்சி என்னும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் தொலைக்காட்சி நிறுவனம் விஜய் மல்லையா மற்றும் பாஸ்கர் சர்வதேச சேனல்கள் என கைமாறி 2001 ஆம் ஆண்டில் ரூபர்ட் முர்டோக்கின் ஸ்டார் நிறுவனத்தால் வாங்கப்பட்டு ஸ்டார் விஜய் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சியில் பிரபலமான நெடுந்தொடர்கள் மற்றும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும் புகழ்பெற்ற தொடரான கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை, காத்து கருப்பு, மதுரை, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு, ஆண்டாள் அழகர் போன்ற பல வெற்றித் தொடர்களை தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த நிலையில் பிரபலமாக இருக்கும் கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி ஒரு கல்லூரி நிகழ்ச்சியாக ஆரம்பித்தது. மேலும் அதில் ஒரு சில சீசன்கள் பல வருடங்களுக்கு முன்பே நிறைவேறி இருந்தது. மேலும் இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு அளித்து வந்தனர்.
இந்த வகையில் அண்மையில் கனா காணும் காலங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் கனா காணும் காலங்கள் ரீயூனியன் என்ற ஒரு நிகழ்ச்சியினை நடத்தி அதில் அந்த சீரியலில் நடித்த அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்து நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் தொடர் மீண்டும் வேறு ஒரு புதிய சீசனில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த தொடரை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.