கனிம வளங்களை திருடினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்! அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

0
197

கனிம வளங்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் உறுதி அளித்திருக்கிறார். தமிழக சட்டசபையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் மற்றும் கனிமவளத்துறை மீதான விவாதம் நடந்தது.அந்த விவாதத்தின் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் பிரின்ஸ் கன்னியாகுமரியில் மலைப்பகுதி கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இதனை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

அவருடைய இந்த கோரிக்கைக்கு பதிலளித்து உரையாற்றிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டி தெரிவித்த துரைமுருகன், இதனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனாலும் கனிம வளங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கையை அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்ட துரைமுருகன் பயன்படாமல் இருக்கும் பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை பொதுமக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு கனிமங்கள் எடுப்பதை தடுப்பதற்காக ஆளில்லாத சிறிய விமானங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

கட்டுமான பணிகளில் மணலுக்கு பதிலாக தற்சமயம் எம்சாண்ட் உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகின்றது. ஆகவே தரமற்ற எம் சாண்டினை சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காகவும், அதனை கண்காணிக்கவும், தயாரிப்பு, தரம் விலை மற்றும் அவற்றை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றில் வரைமுறை படுத்துவதற்கு மாநில அளவில் புதிய கொள்கை ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் துரைமுருகன்.

சுரங்கம் இருக்கும் பகுதியில் மலை போல குவிந்து இருக்கும் குறைந கழிவு கற்களை அரசுக்கு வருவாய் தரும் விதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம் நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிவதற்காக ஆய்வு செய்யப்படும் 20 லட்சத்தில் நவீன நில அளவை கருவி கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Previous articleவெள்ளி வென்ற மாரியப்பன்: 2 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தமிழக அரசு
Next articleதமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு! மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!