திமுகவில் வெளியிடப்பட்ட 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பரபரப்பில் அறிவாலயம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இதுவரை 5 கட்டங்களாக வெளியிட்டுயிருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், 6ம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டிருக்கிறார்.

இதில் திண்டிவனம் விருதாச்சலம், நெல்லிக்குப்பம், அறந்தாங்கி, பண்ருட்டி, உள்ளிட்ட 5 மாநகராட்சிகளுக்கும், அனந்தபுரம், செஞ்சி, தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி, உள்ளிட்ட 16 பேர் ஊராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், திமுக சார்பாக ஏழாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மதுரை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் வடக்கு மதுரை தொகுதியில் 15 வார்டுகளுக்கும், மதுரை மேற்கு தொகுதியில் 15 வார்டுகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிவகாசி மாநகராட்சியில் 29 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல ஒட்டன்சத்திரம், விருதுநகர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை, உள்ளிட்ட நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பரவை, கீரனூர், வேடசந்தூர், வடமதுரை, எரியோடு, அய்யலூர், நத்தம்பாளையம், காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆர்.எஸ். மங்கலம், அபிராமம், முதுகுளத்தூர், மண்டபம், திரும்பிகண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், நெற்குப்பை, இளையாங்குடி, திருபுவனம், சிங்கம்புணரி, திருப்பத்தூர், கானாடுகாத்தான், நாட்டரசன்கோட்டை, முத்தூர், சென்னிமலை, மூலனூர் ,ருத்ராபதி, குளத்துப்பாளையம், கன்னிவாடி, உள்ளிட்ட பேரூராட்சிக்கு வேட்ப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.