சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!!

0
198

சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!!

மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை  வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை எம்எஸ் தோனி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

 பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், இந்நாவலில்  தோன்றுகிறார். மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான தோற்றம், அவரது ரசிகர்களுக்கு அதர்வாவின் உலகத்தைப் பற்றிய ஒரு அற்புதமான பார்வையை அளிப்பதாக அமைந்துள்ளது. மேலும் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரரை  சூப்பர் ஹீரோவாக காட்டியுள்ளது.

இதன் கதையை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். திரு.MVM.வேல் மோகன் தலைமையில் திரு.வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு.அசோக் மேனர் ஆகியோரால், 150 க்கும் மேற்பட்ட உயிரோட்டமான வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நாவல்  குறித்து MS தோனி கூறுகையில், இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா – தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும் மற்றும் அதிஅற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல்.

எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, சம்மதித்தேன் என்று அவர் தெரிவித்தார்.

அதர்வா- தி ஆரிஜின் என்பது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கால கிராஃபிக் நாவல் ஆகும். இதன் முன்கூட்டிய ஆர்டர் இந்த மாதம் துவங்கும்  மற்றும்  நாவலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதிமுகவில் வெளியிடப்பட்ட 6ம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பரபரப்பில் அறிவாலயம்!
Next article‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here