PMK DMK: வன்னியர் இட ஒதுக்கீடு 10.5% வழங்க கோரி இன்று நடத்திய போராட்டத்தில் துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இன்று பெரியார் நினைவு தினத்தை யொட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அனைத்து மாவட்ட தலைமைகளிலும் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது துணை முதல்வர் உதயநிதியின் பேனரானது கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு கட்டாயம் முதல்வர் பதவி கொடுத்திருக்கலாம் குறைந்தபட்சமாக DY CM பதவியாது கொடுத்திருக்கலாம் அதை விட்டு விட்டு தியாகியான உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.
மேற்கொண்டு திமுக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் கூறினார். போராட்டத்தில் துணை முதல்வர் பதவி குறித்து துரைமுருகனை வைத்து பேசியது திமுக வட்டத்தில் சற்று சூட்டைக் கிளப்பியுள்ளது. இதற்கு முன்னதாக மூத்த அமைச்சர்கள் மற்றும் இளம் தலைமுறை நிர்வாகிகளுக்கிடையே என உட்கட்சி பூசல் இருந்து வந்தது. தற்பொழுது பாமக நிறுவனர் ராமதாஸ் இவ்வாறு கூறியது அவர்களுக்கும் மேலும் மோதலை உருவாக்கும்.