துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!!

0
282
Duraisamy must be removed!! Letter to Senji AK Mani Vaiko!!
Duraisamy must be removed!! Letter to Senji AK Mani Vaiko!!

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!!

திருப்பூர் துரைசாமி அவர்களை கட்சியிலிருந்து கண்டீப்பாக நீக்க வேண்டும் என்று செஞ்சி ஏ.கே மணி அவர்கள் மதிமுக கட்சி தலைவர் திரு. வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதிமுக கட்சியை திமுக கட்சியுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார். மதிமுக கட்சியை திமுகவுடன் இணைப்பதில் கட்சியின் தலைவர் வைகோவிற்கு விருப்பம் இல்லை. மேலும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் துளியும் கூட விருப்பம் இல்லை.

இந்த பிரச்சனை காரணமாக மதிமுக கட்சியின் தலைவர் திரு வைகோ அவர்களுக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் துரைசாமி அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று செஞ்சி ஏ.கே மணி திரு வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதாவது மதிமுக கட்சியை திமுக கட்சியுடன் இணைத்து விடலாம் என்று திருப்பூர் துரைசாமி அறிக்கை கொடுத்தது கட்சிக்கு விரோதமான செயல். திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் தன் சுயநலத்திற்காகவும் இவர் இந்த அறிக்கையை விடுத்துள்ளார். இதனால் இவர் கட்சி பொறுப்பில் இருக்கும் தகுதியையும் கட்சியில் உறுப்பினராக இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டார். அதனால்  திருப்பூர் துரைசாமி அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று செஞ்சி ஏ.கே மணி அவர்கள் திரு வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Previous articleCSK  MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!
Next article700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!!