துரைமுருகன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை கடுப்பானது ஆளுங்கட்சி
திமுக பொருளாளரும் எதிர்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் அவர்கள் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் மிகுந்த அனுபவம் உடையவராக அறியப்படுகிறார். எப்போதும் அவருடைய பேச்சில் நக்கல் நையாண்டிக்கு குறைவில்லாமல் இருக்கும்.
அந்த வகையிலே நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அவருடைய பேச்சு மிகுந்த சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நேற்றைய தினம் வனத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது துறைமுருகன் அவர்கள் எழுந்து தமிழகத்தில் வன விலங்குகளின் அச்சுருத்தல் மிகவும் அதிகமாக உள்ளது.
சமீப காலங்களில் காட்டை ஒட்டியும், மலையோரங்களிலும் வாழும் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. எப்போது எந்த விலங்கு வந்து தாக்குமோ என்ற அச்சத்திலே வாழ வேண்டிய சூழல் உள்ளது இதற்க்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது மிகவும் வேதனைக்குரிய செயல் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் அவர்கள் நான் கூட காட்பாடியில் என்னுடைய தோட்டத்தில் மிகவும் ஆசையாக எலுமிச்சை செடியை வளர்த்து வந்தேன் அதைக்கூட யானை மிதித்து நாசம் செய்து விட்டது. முருங்கை மரத்தை உடைத்து போட்டு விட்டது. இதே நிலை நீடித்தால் நாங்கள் எப்படி மரங்களை வளர்ப்பது என்று கேள்வி எழுப்பிவிட்டு அமர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனுவாசன் அவர்கள் மான்புமிகு எதிர்கட்சி துணைத் தலைவரைப் போலவே அவருடைய தோட்டமும் மிகுந்த வளமாக காணப்படுவதால் யானைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது போல அதனால் தான் மீண்டும் மீண்டும் அவருடைய தோட்டத்தையே யானைகள் தாக்குகின்றன என்றவுடன் அவையில் மிகுந்த சிரிப்பலை ஏற்பட்டது.
நேற்றைக்கு முன்தினம் கொரோனோ வைரஸ் குறித்து திரு.துரைமுருகன் அவர்கள் பேசிய பேச்சும் பேரவையில் அனைவராலும் கவனிக்கத்தக்கதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.