கடவுள் இல்லை என்ற காலம் போய் ஆன்மிகம் பக்கம் திரும்பும் ஸ்டாலின் குடும்பம்!

0
120

பேரறிஞர் அண்ணாவால் திமுக தோற்றுவிக்கப்பட்ட போதும் சரி, அதன் பின்னர் அவரால் அந்த கட்சி வழி நடத்தப்பட்ட போதும் சரி, அவர் காலத்திற்கு பின்பு கருணாநிதியால் அந்த கட்சியை வழி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும் சரி, அந்தக் கட்சி ஒரே ஒரு கொள்கையை மட்டும் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தது. அந்த கட்சி அப்படி உறுதியாக வைத்திருந்த கொள்கையின் அடிப்படையிலேயே பலமுறை ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது..

அதாவது தந்தை பெரியாருக்கு பின்னர் மூடநம்பிக்கை என்பதை சாராத ஒரு கட்சியாகவும், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியாகவும், அடையாளம் காணப்பட்ட ஒரு கட்சியாக திமுக இருந்தது. ஆனால் இந்த கடவுள் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்து சமயத்தை சார்ந்த மக்களை அந்த கட்சி தொடர்ந்து இழிவுபடுத்தி கொண்டே வந்தது என்றால் அது மிகையாகாது.

பல சமயங்களில், பல இடங்களில் இந்து சமய நம்பிக்கைகளையும், இந்து மக்களையும், இழிவுபடுத்தும் விதமாக சிறுபான்மையினர் உரையாற்றிய போது அதனை கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கட்சிதான் திமுக.

ஆனால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு இந்து சமயத்திற்கு சாதகமாக செயல்படுபவரை போல தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார். வாக்கு அரசியலுக்காக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பாவம் இந்த அப்பாவி இந்து மக்களுக்கு இன்று வரையும் தெரியவில்லை.

ஆனால் ஸ்டாலின் குடும்பத்தினர் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று காட்டிக் கொண்டு இருந்தாலும் அவருடைய குடும்பத்தில் ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் கடவுள் மீது அதீத நம்பிக்கை உடையவர். ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் பல ஆலயங்களில் பல வேண்டுதல்களை வைத்திருந்தார், ஸ்டாலின் தற்சமயம் முதல்வராகி இருக்கக்கூடிய நேரத்தில் அந்த வேண்டுதல்களை ஒவ்வொன்றாக செய்து முடித்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.

இந்த சூழ்நிலையில், காசி விஸ்வநாதர் ஆலயம் கேதார்நாத் சென்று சில வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளார் துர்கா ஸ்டாலின், நேபாளம் நாட்டில் இருக்கின்ற பிரபல சிவன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சில முக்கியமான கோவில்களையும் கட்ட தயாராகி வருகின்றார் துர்கா ஸ்டாலின், அண்மையில் மகாபலிபுரத்தில் பெருமாள் சிலை ஒன்றையும் வாங்கி இருக்கின்றார் துர்கா ஸ்டாலின், ஆனால் இந்த சிலையை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னவர் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த சிலையை சந்திரிகா வாங்காமல் இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த சிலையை தற்சமயம் துர்கா ஸ்டாலின் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அடுத்ததாக கிருஷ்ணகிரியில் துர்கா ஸ்டாலின் அவர்களால் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கோவிலில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கின்ற திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் துர்கா ஸ்டாலின் பல கோவில்களை கட்டிக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அத்தோடு நின்று விடாமல் திருவண்ணாமலையில் இருக்கின்ற அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திடமும் பக்தர்கள் தங்குவதற்காக கட்டிடம் கட்ட அனுமதி மற்றும் இடம் உள்ளிட்டவற்றை கேட்டிருக்கிறார் துர்கா ஸ்டாலின் என்று சொல்லப்படுகிறது.

Previous articleகுற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!
Next articleகலகலப்புடன் வெளியான பிக் பாஸ் 5 சீசனின் இரண்டாவது புரோமோ.!!