நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் திருமண முறிவிற்குப் பின் சமந்தா இப்பொழுதும் சிங்கிளாக உள்ளார். சமந்தா மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் மண முறிவுக்குப் பின் கெரியர் பிரேக் எடுத்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வும் அடைந்துள்ளார்.
இந்நிலையில், நாகசைதன்யா சமந்தா பிரிவிற்கு காரணம் அவர்கள் வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் திருமணத்தின் போது சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெஸ்லிங் வீடியோ ஷேர் செய்திருந்தார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் ரெஸ்லிங் செய்வது போன்றும், முதலில் கை கொடுக்கும் போதே ஆண் அந்தப் பெண்ணின் கையை காயப்படுத்தியதும், கடைசியில் அந்தப் பெண் ஜெய்பது போன்றும் அந்த வீடியோ இருந்தது. எந்நிலையாயினும், ஜெயிக்க வேண்டும் என மன உறுதியோடு இருந்தார் சமந்தா.
ரசிகர்களோ இவர்களது பிரிவிற்கு காரணம் சோபிதா என்று கூறியிருந்தனர். சமந்தா சைதன்யா ப்ரொபோஸ் டேட்டில் தான் சோபிதா சைதன்யாவின் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவ்வாறு பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது சோபிதா அவர்கள் சமந்தாவுடன் போட்டி போடுவதாகவும் சமந்தா அணிந்த அதே நகைகளை தான் சோபிதா தனது திருமணத்திற்கு போட்டிருப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில பேர் அது வேறு டிசைன் இது வேறு டிசைன் என்றும் ட்விட் செய்து வருகின்றனர்.