லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! பலிக்காத திமுக கனவு!

Photo of author

By Sakthi

அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ் பி வேலுமணி அவரை மையமாக கொண்டு நேற்றைய தினம் சுமார் 60 இடங்களில் அவருக்கு சொந்தமான பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. இதுகுறித்த அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அந்த அறிக்கையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த விசாரணை அறிக்கை அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது உயர்நீதிமன்றம். இந்த விவகாரத்தில் மிக நீண்ட விசாரணை தேவை என்று தெரிவித்திருக்கிறது.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் வேலுமணியின் அவர்களின் மீதும் அவரை தவிர்த்து 16 நபர்கள் மீதும் அதோடு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி அதாவது நேற்றையதினம் ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் சோதனைகள் செய்யப்பட்டன. கோயம்புத்தூரில் 42 இடங்களிலும் ஞாயில் 10 இடங்களிலும் காஞ்சிபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடத்திலும் என்று ஒட்டுமொத்தமாக 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் வேலுமணி ,அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தவர்களின் வீடு, அலுவலகங்கள், பண்ணை வீடுகள், தொழில் நிறுவனங்கள், உள்ளிட்டவற்றில் சோதனை செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த சோதனைகளின் போது 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் நில பதிவுகள் குறித்த ஆவணங்கள், தொழில் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பரிமாற்ற ஆவணங்கள் 2 கோடி ரூபாய்க்கான ஃபிக்ஸட் டெபாசிட் ஆவணங்கள், மாநகராட்சிகள் குறித்த அலுவலக ரீதியான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் குற்றவியல் ஆவணங்கள், உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.

இதுகுறித்து புலனாய்வு விசாரணை ஆரம்பமாகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் நேற்று இரவு தன் மீதான சோதனை முடிவுற்ற பின்னர் இரவு சட்டசபை உறுப்பினர்கள் விடுதியில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.தற்போது இந்த அதிரடி சோதனை க்கு காரணம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். முன்னாள் அமைச்சர் வேலுமணி கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று தான் அவர் அமைச்சராக பதவி வகித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய திமுகவால் கொங்கு மண்டலத்தை மட்டும் நெருங்கவே முடியவில்லை. கோயமுத்தூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.ஆனால் தேர்தலுக்கு முன்பு வரையில் உதயநிதி ஸ்டாலின், முதல் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் வரையில் திமுகவின் மிக முக்கிய புள்ளிகள் கோயம்புத்தூரை வட்டமிட்டு பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

ஆனால் அவர்களின் கடின உழைப்பு பலனளிக்காமல் போனது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற இயலவில்லை. இதன் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் கோயமுத்தூர் அதிமுக மீதும் குறிப்பாக கோயம்புத்தூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.இதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் விதத்திலும், எப்பொழுதும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியை பலவீனப்படுத்தும் விதத்திலும், இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.