“மின்னணு வர்த்தகம்” இலவச பயிற்சி வகுப்புகள்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

0
82
"E-Commerce" Free Training Courses!! Tamil Nadu Government's new notification!!
"E-Commerce" Free Training Courses!! Tamil Nadu Government's new notification!!

சென்னையில் இருக்கக்கூடிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனமான EDII – TN ஆனது மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பில் 3 நாட்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதாக அறிவித்திருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் நடைபெறும் இடமானது EDII நிறுவனத்தின் வளாகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மின்னணு வர்த்தகம் என்ற பெயரில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் 7 வகையான பாடக்குறிப்புகள் இடம் பெற்று இருக்கின்றன.

மின்னணு வர்த்தகம் என்ற தலைப்பின் கீழ் எடுக்கப்படக்கூடிய பயிற்சி வகுப்புகளின் விவரங்கள் பின் வருமாறு :-

✓ மின்னணு வர்த்தகத்தின் அறிமுகம் மற்றும் அதனுடைய மாதிரி வகைகள் / நன்மைகள் மற்றும் சவால்கள்

✓ டொமைன் மற்றும் ஹோஸ்டிங் உங்கள் கடையை வடிவமைத்தல்/ பணம் செலுத்தும் வாயில்களை அமைத்தல்/உங்களுடைய இணைய வழி வர்த்தகத்தை அமைத்தல் மற்றும் மின் வணிக தளத்தை தேர்ந்தெடுத்தல் போன்றவை.

✓ மின் வணிகத்திற்கு சந்தைப்படுத்துதல்/தேடல் இயந்திர மேம்பாடு/சமூக ஊடக விளம்பரம்/மின்னஞ்சல் சந்தைப்படுத்துதல் மற்றும் PPC போன்றவை.

✓ சரக்கு மேலாண்மை/தயாரிப்பு பட்டியல்/தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தேர்வு/தயாரிப்பு மேலாண்மை மற்றும் சரக்கு கையாளுதல் போன்றவை.

✓ மின் வணிக நிதி மேலாண்மை/விலை நிர்ணய உத்திகள்/பட்ஜெட் மற்றும் முன்னறிவிப்பு/செயல்திறன் அளவுகோல்கள் போன்றவை.

✓ செயல்பாடுகள் மற்றும் தளவாட மேலாண்மை/ஒழுங்கு மேலாண்மை/பொருட்களை அனுப்புதல் மற்றும் விநியோகம் செய்தல் / மின் வணிகத்திற்கான நிதி மேலாண்மை போன்றவை.

✓ இறுதியாக, வளர்ச்சி மற்றும் விரிவாக்கமும் / புதிய சந்தைகளில் நுழைதல் தானியங்கி மற்றும் வெளி கட்டளைகளில் மாற்றம்/தயாரிப்பு வரிசை விரிவாக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

குறிப்பு :-

இது குறித்த மேலும் கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ள www.editn.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், 9841693060/9677152265 என்ற தொலைபேசி அல்லது மொபைல் எண்களை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெறுபவர்களுக்கு இலவச அரசு சான்றிதழும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleவீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில் விஜய் ஏற்ற உறுதிமொழி!!
Next articleவேகமாக பரவி வரும் தொற்றுநோய் அபாயம்!! அச்சத்தில் பொதுமக்கள்!!