செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்!

Photo of author

By Rupa

செல்போன் மூலம் இ-பாஸ்! ஓரிரு நிமிடங்களில்!

கொரோனா தொற்றானது முடிவே இல்லாமல் தொடர்ந்து பரவி வருகிறது அரசாங்கமும் தடுப்பூசி கண்டுபிடித்தும் கட்டுப்படுத்த முடியா நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தி விடுகின்றனர்.தற்போது இந்த கொரோனாவின் 2 வது அலை இந்தியாவை அசுர வேகத்தில் அழித்து வருகிறது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.அந்தவகையில் வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.தற்போது தமிழ்நாட்டில் கூட மாவட்டங்களுக்கு இடையசெல்வதற்கு இ-பாஸ் தேவை என கூறியுள்ளனர்.அதை நமது செல்போன் வாயிலாகவே எளிதாக எடுத்துவிடலாம்.

வெளி மாநிலங்களுக்கோ அல்லது மாவட்டங்களுக்கோ செல்ல இ-பாஸ் எடுக்க அரசின் http://tnepass.tnega.org/user/pass என்ற லிங்கை உங்கள் செல்போனில் கிளிக் செய்தால் அந்த இணைய பக்கத்திற்கு செல்லும்.அதனையடுத்து அந்த இணையம் முதலில் உங்கள் செல்போன் எண்ணை கேட்கும்.நாம் செல்போன் எண்ணை தரும்பொழுது,அந்த எண்ணிற்கு ஆறு இலக்க ஓடிபி எண் வரும்.அதனடுத்து அந்த ஓடிபி எண்ணை அந்த இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதனடுத்து இ-பாஸ் படிவம் உங்களது செல்போன் ஸ்க்ரீனில் தோன்றும்.அதில் நீங்கள் எதில் பயணிக்க போகிறீர்கள் அதாவது (கார்,விமானம்),எந்த காரணங்களுக்காக பயணம் செய்ய போகிறீர்கள் (தொழில்,தனிப்பட்ட காரணம்),என உங்களுக்கு தேவையானவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.அதனையடுத்து உங்கள் பெயர்,வீட்டின் முகவரி,எத்தனை நாள் பயணம் என அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.நீங்கள் பயணிக்க போகும் காரணங்களுக்கு தேவையான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

அதாவது,மருத்துவரை காண சென்றால் மருத்துவ சான்றிதழ்,நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடித்தம்,திருமண அழைப்பிதல் போன்றவையும் பதிவிட வேண்டும்.இதனோடு இரண்டு அடையாள சான்றிதல்களையும்
(ஆதார் அட்டை,வாக்களர் அட்டை)பதிவிட வேண்டும்.ஓட்டுனர் உரிமம் இருந்தால் அதையும் அடையாள அட்டையாக பதிவு செய்யலாம்.இந்த ஆவணங்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்த பின்னர்,அவர்கள் பதிவு செய்த அனைத்தும் சரியா என்று பார்த்து இ-பாஸ் வழங்கப்படும்.ஓரிரு நிமிடங்களிலே செல்போன் மூலம் இ-பாஸ் எடுத்துக்கொள்ளலாம்.இ-பாஸ் வந்ததும் அதனை டௌன்லோட் செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.