கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

0
177
Kodaikanal E-Pass
Kodaikanal E-Pass

கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவை இ-பதிவு எனப்படும் இணையவழிப் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் எனப்படும் இணையவழி அனுமதிச்சீட்டு கட்டாயம் மாவட்ட ஆட்சியர்களிடம் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கொடைக்கானல், உதகை செல்வோர் இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கொடைக்கானல் அருகே பள்ளங்கி பெருங்காட்டில் பழங்குடியினருக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா பங்கேற்று பொருட்களை வழங்கினார். அவர்களுக்கு கபசுரக்குடிநீரும் வழங்கப்பட்டது.

பின்னர் பேசிய காவல் கண் காணிப்பாளர், கொடைக்கானல் பகுதியில் இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இணைய வழி அனுமதி சீட்டு இல்லாமல் கொடைக்கானல் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Previous articleஇந்த ராசிக்கு எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது! இன்றைய ராசி பலன் 10-06-2021 Today Rasi Palan 10-06-2021
Next articleமத்திய அரசை குற்றம்சாட்ட விரும்பவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!