சற்றுமுன்: அதிமுக கொலுசா?? திமுக ஸ்மார்ட் வாட்ச் ஹா?? தொடங்கியது கிழக்கு இடைத்தேர்தல்!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வெற்றிக்கான பாதையை அமைக்க போகிறோம் என தெரிவித்தது.
அதேபோல எதிர்க்கட்சி இரு அணிகளாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் ஓபிஎஸ் பின்னடைவை சந்திக்க இரட்டை இலை சின்னம் மற்றும் இரட்டை இலை இவை இரண்டும் இந்த தேர்தலில் எடப்பாடி அவர்களுக்கு சொந்தமானது.
இதை அடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தென்னரசுவை நிற்க வைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியதை அடுத்து அமமுக மற்றும் பாமக இந்த தேர்தலில் போட்டியிட வில்லை என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதிமுக திமுக பாஜக நாம் தமிழர் கட்சி என அனைவரும் ஒருவர் ஒருவர் சலித்தவர் இல்லை என போட்டியிட ஆரம்பித்தனர்.
இதன் உச்சகட்ட நிலையாக திமுக அங்கிருக்கும் மக்களுக்கு குக்கர் 4000 பணம் கொடுத்தால், அதிமுக வெள்ளி கொலுசு என ஆரம்பித்து பணத்தை வாரி இறைக்க தொடங்கினர்.
இதனின் முற்றுப்புள்ளி இன்றுதான் இருக்கும் என்ற பட்சத்தில் வாக்குப்பதிவானது இன்று மாலை 7 மணி முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2.27 லட்சம் பேர் வாக்கு செலுத்தும் அளவிற்கு வாக்காளர்கள் இருக்கும் நிலையில், காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் கிட்டத்தட்ட 22, 973 வாக்காளர்கள் மட்டுமே தங்களது ஓட்டை செலுத்தியுள்ளனர்.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும் என கூறியுள்ளனர். இதர காட்சிகளை விட அதிமுக திமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் இரண்டும் மாற்றி மாற்றி வெற்றி பெற வேண்டும் என பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியுள்ள நிலையில் எந்த கட்சி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.