உயிர்க்கொல்லி நோய்களில் HIV மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.தவறான பாலியல் முறையால் எச்ஐவி எய்ட்ஸ் வருகிறது என்பது பலரின் கண்ணோட்டம்.ஆனால் இதை தவிர வேறு சில காரணங்களாலும் HIV வரைஸ் பரவக்கூடும்.இது ஒரு தொற்று பாதிப்பாகும்.HIV வைரஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் நமது உடலில் செல்லும் போது அவை எளிதில் பரவிவிடும்.
HIV பாதித்தவரை முத்தம் கொடுப்பது,தொடுவது,கட்டிப் பிடிப்பது போன்ற செயல்கள் மூலம் வைரஸ் தொற்று பரவாது.ஆனால் HIV தொற்று பாதித்தவருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் அவை பரவக்கூடும்.
அதேபோல் HIV உள்ள நபர்களுக்கு செலுத்தப்பட்ட ஊசியை மற்றவர்களுக்கு செலுத்தும் போது வைரஸ் தொற்று பரவக்கூடும்.
HIV ஆரம்ப அறிகுறிகள்:
1)தொடர் காய்ச்சல்
2)திடீர் உடல் எடை குறைதல்
3)தொடர் இருமல்
4)மூட்டு வலி
5)தலைவலி
6)உடல் சோர்வு
7)தோல் அரிப்பு/தோல் எரிச்சல்
ஒருவருக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்தால் அது HIV நோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகளாக இருக்கலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வழக்கத்தை விட உடல் எடை அதி வேகமாக குறைந்தால் அது எச்ஐவி பாதிப்பிற்கான ஆரம்ப அறிகுறிகளாக அறிகுறிகளாக இருக்கக்கூடும்.கை கால் நகங்களின் நிறம் மாறுபட்டிருந்தால் அது HIV நோய்க்கான அறிகுறிகளாக இருக்க கூடும்.
HIV வைரஸ் பரவல் அதிகமானால் இருமல் பாதிப்பு அதிகமாகும்.உங்களுக்கு தொடர் இருமல் பிரச்சனை இருந்தால் HIV பரிசோதனை செய்து கொள்வது நல்லது.உங்களுக்கு தோல் அரிப்பு,தோல் எரிச்சல் அதிகமாக இருந்தால் அதை அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.
HIV தொற்று இருந்தால் தசைகள் மற்றும் மூட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.இந்த பாதிப்பு தொடர்ந்தால் நீங்கள் அவசியம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.காரணமின்றி அதிகப்படியான தலைவலி ஏற்பட்டால் அலட்சியம் செய்யமால் மருத்துவரை அணுக வேண்டும்.
HIV-ஐ கண்டறிய மருத்துவ துறையில் பல சோதனைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.எலிசா,ஹெபடைடிஸ் போன்ற மருத்துவ சோதனைகள் மூலம் HIV தொற்றை கண்டறிய முடியும்.