யூடியூப் போலவே டுவிட்டரிலும் வருவாய்! மகிழ்ச்சியில் இருக்கும் டுவிட்டர் பயனாளர்கள்!!
யூடியூப் போலவே டுவிட்டரிலும் இனி வருவாய் ஈட்ட முடியும் என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. டுவிட்டரின் இந்த அறிவிப்பால் டுவிட்டர் பயனாளர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
பிரபல ஆன்லைன் வீடியோ தளமான யூடியூப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பை அளித்து வருகிறது. மேலும் யூடியூப் நிறுவனமானது தன் பயனாளர்களை சமூகத்தில் ஒரு பிரபலமாக மாறவும் உதவி செய்து வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் யூடியூப் செயலி மூலமாக வருவாய் ஈட்டுவதற்கு சில தகுதிகளை நாம் அடைய வேண்டும். அதாவது 4000 மணிநேரம் மற்றும் 1000 பின்தொடர்பவர்கள்(சப்ஸ்கிரைபர் ஸ்) என்ற இலக்கை நாம் அடைந்து விட்டால் நாம் யூடியூப் செயலியில் இருந்து வருவாய் ஈட்டலாம்.
தற்பொழுது டுவிட்டர் நிறுவனமும் யூடியூப் போலவே பயனாளர்களுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
டுவிட்டர் நிறுவனம் இது தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஆச்சரியம்! இன்று எங்கள் கிரியேட்டர் விளம்பரங்கள் வருவாய் பகிர்வு திட்டத்தை தொடங்கினோம்.
கிரியேட்டர்களுக்கான விளம்பர வருவாய் பகிர்வைச் சேர்க்க, எங்கள் கிரியேட்டர் லாபம் ஈட்டுதல் சலுகையை விரிவுபடுத்துகிறோம். அதாவது, படைப்பாளிகள் தங்கள் இடுகைகளுக்கான பதில்களில் தொடங்கி, விளம்பர வருவாயில் ஒரு பங்கைப் பெறலாம். ட்விட்டரில் மக்கள் நேரடியாக வாழ்வாதாரம் சம்பாதிக்க உதவும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதி இது.
இந்த மாதத்தின் பிற்பகுதியில் திட்டத்தை இன்னும் விரிவாக வெளியிடுகிறோம், தகுதியுள்ள அனைத்து படைப்பாளர்களும் விண்ணப்பிக்க முடியும்” என்று அறிவித்துள்ளது.
மேலும் டுவிட்டர் நிறுவனம் இந்த வருவாய் பகிர்வு திட்டத்தை புளூ டிக் பெற்றவர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வருவாய்ப் பகிர்வு திட்டமானது ஐரோப்பா போன்ற சில நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நாட்கள் செல்ல செல்ல இந்த வருவாய் பகிர்வு திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.