டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!! திணறும் மத்திய அரசு!!

Photo of author

By Preethi

டெல்லி அரசியலில் பூகம்பம்!! பெகாசஸ் விவகாரத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு!!திணறும் மத்திய அரசு!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெகாசஸ் மென்பொருளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், முக்கிய பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பெரிதும் கோபமடைந்த எதிர்க்கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து விமர்சனம் செய்து வருகிறது.

மேலும் பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பி பெரும் சலசலப்பை உருவாக்கி வருகிறது.  இதுகுறித்து மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது இருப்பினும் பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் தலைநகரான டெல்லியின் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்க்கும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த விசாரணைக்கு தனிக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.  இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை தனிக் குழு அமைத்து விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.