இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; 4 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; 4 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஓட்டல் இடிந்து விழுந்து 4 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தியா உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகள் மீட்புக் குழுவை அனுப்பியுள்ளனர்.

பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில இருந்து கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. அதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். அப்பகுதியில் மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Comment