இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

0
406
#image_title

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் வடகிழக்கில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 05:02 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கி மீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததோடு, சுமார் 97 கி மீ (60 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வடக்கு வடக்கு மலுகு மாகாணம் முழுவதும் லேசான முதல் மிதமான நடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

Previous articleமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? சின்ன வெங்காயம் போதும்!
Next articleஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி