ஈஸி ஸ்டெப்ஸ்.. இனி Google Pay ஆப் மூலம் ஈசியாக IRCTC டிக்கெட்டை புக் செய்யலாம்!!

Photo of author

By Divya

ஈஸி ஸ்டெப்ஸ்.. இனி Google Pay ஆப் மூலம் ஈசியாக IRCTC டிக்கெட்டை புக் செய்யலாம்!!

நம் நாட்டில் ரயில் போக்குவரத்து முதன்மை போக்குவரத்தாக திகழ்கிறது.குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் ரயில் போக்குவரத்தை தான் தேர்வு செய்ய வேண்டும்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பதுடன் பயணம் மேற்கொள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ள ரயில்வே டிக்கெட் கவுண்டருக்கு சென்று கால் வலிக்க நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை.இந்திய ரயில்வே நிர்வாகமே ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள IRCTC டிக்கெட் முன்பதிவு முறையை கடைபிடித்து வருகிறது.

ஆன்லைனில் IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது பற்றி பலரும் அறிந்திருப்பீர்.ஆனால் கூகுள் பே மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.

கூகுள் பேமூலம் IRCTC டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

முதலில் கூகுள் பே ஆப்பை திறக்கவும்.பிறகு அதில் உள்ள பிசினஸ் செக்ஷன் என்பதை கிளிக் செய்யவும்.அதன் பின்னர் Trains என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அடுத்து “Book train tickets” என்பதை கிளிக் செய்து தேதி,பயணம் செய்ய வேண்டிய இடம் குறித்த தகவலை தெரிவிக்கவும்.இவ்வாறு செய்த பின்னர் check availability என்பதை கிளிக் செய்து பயணத்திற்கு உரிய கட்டண விவரத்தை சரி பார்க்கவும்.

அதன் பின்னர் passenger details என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.பிறகு உங்கள்பெயர்,வயது உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து Continue என்பதை கொடுக்கவும்.இவ்வாறு செய்தால் உங்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

அதன் பிறகு UPI PIN எண் என்டர் செய்து டிக்கெட்டிற்கு உரிய பணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.அவ்வளவு தான் உங்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு முறை முடிந்துவிடும்.