இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!

0
183
#image_title

இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!

நாவல் பழத்தை நாம் சாப்பிடுவதால் நமக்கு மாரடைப்பு என்பது ஏற்படாது. இந்த நாவல் பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது. இந்த பதிவில் நாவல் பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

 

* நாவல் பழங்களை நாம் சாப்பிடுவதால் இந்த நாவல் பழம் நம் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கிவிடுகிறது. இதன் மூலம் நமக்கு விரைவாக வயதாகும் தன்மையை தள்ளிப் போடுகிறது.

 

* ஆப்பிள், மாதுளை, கேரட் போன்றவற்றை விட நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளது. இது நம் உடலில் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகின்றது.

 

* இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நாவல் பழத்தின் இலையையும் பட்டையையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

 

* நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் சரியாகும். அது மட்டுமில்லாமல் சிறுநீரகப் பை தொடர்பான பிரச்சனையையும் இது சரி செய்யும்.

 

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரி சமமான தண்ணீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும்.

 

* சிறுநீரக கல்லால் தினமும் வேதனைப்படுபவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வரலாம். மேலும் இந்த நாவல் பழத்தின் கொட்டைகளை உலரவைத்து அதை பொடியாக்கி அந்த பொடியை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை சரியாகும்.

 

* நாவல் பழம் வாயுப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

 

* நாவல் பழத்தின் இலைகளை பொடி செய்து அந்த பொடியை வைத்து நாம் பல் விளக்கினால் பற்கள், ஈறுகள் எல்லாம் பலம் அடையும்.

 

* வயிற்றுப் போக்கு பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தின் ஜூஸை குடிக்கலாம். அதிலும் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால் வயிற்றுப் போக்கு பிரச்சனை குணமடையும்.

 

* அசிடிட்டி, அஜீரணக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் நாவல் பழத்தில் சிறிதளவு சீரகப் பொடி, சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை சரியாகி விடும். மேலும் இது குடல் தசைகளை வலுவிலக்கவும் செய்யும்.

 

* மூலநோய் உள்ளவர்கள் தினமும் காலை நேரத்தில் இரண்டு அல்லது மூன்று நாவல் பழங்களில் உப்பு அல்லது தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து முன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோயில் இருந்து முற்றிலும் குணம் பெறலாம்.

 

* தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு நாவல் பழத்தின் விதைகளில் செய்யப்பட்ட பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஒரு நாளுக்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் குழந்தைகளுக்கு இந்த பழக்கம் நிற்கும்.

 

* நாவல் பழங்களை அளவாக சாப்பிட்டு வந்தால் தமணிகளில் உண்டாகும் பிரச்சனைகளை சரிசெய்து மாரடைப்பு வராமல் தடுக்கின்றது.

 

* நாவல் பழத்தின் விதைகளை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கலாம். அல்லது நாவல் பழத்தின் ஜூஸை குடித்தாலும் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.