அசைவம் என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நினைவில் வருவது சிக்கன். ஆனால் அது சாப்பிட மிக சுவையாக இருந்தாலும் பல விதமான தீமைகளை நமக்கு மறைமுகமாக ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இந்த பிராய்லர் கோழியை வளர்க்க பலவித வேதிப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த கோழியும் குறுகிய காலத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் இந்த பிராய்லர் சிக்கனை தான் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் பிராய்லர் சிக்கனை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் என பலவித ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதற்கு காரணமாக பிராய்லர் கோழி வளர்க்க கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் துறை இயக்குநர் அபிஆஸ்மா இதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் புற்றுநோய் வராமல் இருக்க பல்வேறு காரணங்களையும், அதை பொதுமக்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதில் பிராய்லர் கோழி மற்றும் இதை வைத்து தயாரிக்கப்படும் தந்தூரி உள்ளிட்ட எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட சிக்கன் உணவுகளை அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பார்.
அந்த வகையில் கிரில் சிக்கன், தந்தூரி போன்ற நீண்ட நேரம் சூடுபடுத்தும் உணவுகளை அதிகம் சேர்க்கக் கூடாது என்று அவர் கூறினார்.
மேலும் பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல், உடல் பருமன், கார்டியோ வாஸ்குலர் நோய்கள் மற்றும் சோடியம் அளவு அதிகரித்தல், யூரிக் அமிலம் அதிகரித்தல், உடல் சூடு அதிகரித்தல் போன்ற பல வித நோய்களை ஏற்படுத்தும். அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் பெண்கள் விரைவில் வயதுக்கு வர காரணம் பிராய்லர் சிக்கனின் வளர்சிக்காக சேர்க்கப்படும் ஒரு விதமான கெமிக்கல் ஆகும்.
பிராய்லர் கோழியின் மூலம் தான் பறவை காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை இது கடுமையாக பாதிக்கிறது. இந்த சிக்கனில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் இருப்பதால் ரத்த அழுத்தம் மற்றும் இருதய கோளாறு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் வீட்டில் வளர்க்கும் கோழி இறைச்சி உண்டால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் யாரும் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. அதே போல பிராய்லர் கோழி கறியை எப்போவாது உண்பவர்களுக்கு பெரியதாக இதன் தாக்கம் எதுவும் இல்லை என்பதும் பரவலான கருத்தாக உள்ளது.
அந்த வகையில் பிராய்லர் கோழி அடிக்கடி சாப்பிடும் நபர்கள் இனி சாப்பிடுவதா வேண்டாமா என்பதை சம்பந்தபட்ட நபர்கள் தகுந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவு செய்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையானது இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து எழுதப்பட்டதாகும். இதில் வரும் தகவல்களுக்கு எந்த வகையிலும் இணையதளம் பொறுப்பாகாது.