அனைத்து பருவ காலங்களிலும் சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்க நாம் முறையான சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.மழை மற்றும் கோடை காலத்தை ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் தான் சருமப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.
சரும வறட்சியை கவனிக்க தவறினால் அவை இளம் வயதில் முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.உடல் வெள்ளையாக இருப்பது அழகு கிடையாது.சருமம் பொலிவாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது தான் உண்மையான அழகு.
தோல் வறட்சி இருந்தால் சரும வெடிப்பு,சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே தோல் வறட்சி நீங்கி சருமத்திற்கு இயற்கை ஈரப்பதம் கிடைக்க உணவுமுறையில் மாற்றத்தை கொண்டுவரவும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் சருமம் சுருக்கமாவது கட்டுப்படும்.சிவப்பு கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரும சுருக்கம் கட்டுப்படும்.
கீரைகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான நீரை பருக வேண்டும்.பாதாம்,வால்நட் போன்ற உலர் விதைகளை உட்கொண்டால் சரும சுருக்கம் கட்டுப்படும்.
கொலாஜன் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.ஆப்பிள்,ஆரஞ்சு,பப்பாளி போன்ற பழங்கள் சரும சுருக்கங்களை போக்க உதவுகிறது.
பீட்ரூட்,கேரட் போன்ற காய்கறிகளை அரைத்து ஜூஸாக பருகி வந்தால் சருமப் பொலிவு உண்டாகும்.சிட்ரஸ் நிறைந்த பழங்களை அதிகளவு சாப்பிட வேண்டும்.ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் மிருதுவாக இருக்கும்.
தோல் வறட்சியால் அவதியடைந்து வருபவர்கள் துத்தநாகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.நல்ல கொழுப்பு உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கெமிக்கல் பொருட்களுக்கு பதில் இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க வேண்டும்.பாதாம் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க்கிறது.பழச்சாறு பருகி வந்தால் சருமம் வறட்சியாவது கட்டுப்படும்.சருமம் பொலிவாக இருக்க வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.