திமுக அமைச்சர்களை விடாது துரத்தும் ED.. வசமாக சிக்கப்போகும் ஸ்டாலினின் நெருங்கிய உறவு!!

Photo of author

By Rupa

திமுக அமைச்சர்களை விடாது துரத்தும் ED.. வசமாக சிக்கப்போகும் ஸ்டாலினின் நெருங்கிய உறவு!!

Rupa

ed-chasing-dmk-ministers-without-letting-go

DMK BJP: பாஜகவானது திமுகவிற்கு எதிராக செயல்பட அமலாக்கத்துறை கொண்டு தாக்கி வருகிறது. அதன்படி ED வலையில் சிக்கிய செந்தில் பாலாஜியையே ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் வெளியே கொண்டு வந்தனர். குறிப்பாக பாஜக-வானது ஸ்டாலினுடன் பக்கபலமாக இருக்கும் அமைச்சர்களைத்தான் குறிவைத்து தாக்குகிறது. அதன்படி ஸ்டாலினுக்கு அனைத்து வகை செயலாளராக இருக்கும் கேஎன் நேருக்கு அடுத்த அடி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜி வழக்கை போலவே, முதலில் கேஎன் நேருவின் உறவினர்கள் வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்குமா என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். பின்பு இவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு செந்தில் பாலாஜியை போலவே இவரையும் கைது செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரம் கூறுகின்றது.

குறிப்பாக பாஜகவின் முக்கிய நோக்கமே திமுகவின் செயல்பாட்டை குறைப்பது தான். அதற்காக எந்த எல்லையை தாண்டவும் தயாராக உள்ளனராம். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணியில் இணைப்பதற்காக அண்ணாமலையையே பதவியிலிருந்து நீக்கம் செய்ய துணிந்து விட்டனர். வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலை தங்கள் வசம் படுத்தவே இப்படி பல திட்டங்களை போட்டு வருவதாக கூறுகின்றனர். அந்தவகையில் ஈடி கையில் கே என் நேரு சிக்கப்போவது உறுதி என கூறுகின்றனர். இதன் மூலம் அவர்களின் வாக்கு வங்கி சதவீதமானது குறையாக கூடும்.