DMK: இந்த வருடம் ஆரம்ப கட்ட மாதத்திலிருந்தே திமுக அமைச்சர்களை அமலாக்கத்துறை டார்கெட் செய்து வருகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு விற்றது தொடர்பாக அமைச்சர் துறைமுருகன் மற்றும் அவரது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வீடுகளிலும் சோதனை நடத்தியது.
இவரைத் தொடர்ந்து தற்பொழுது அமைச்சர் கே என் நேரு சிக்கி உள்ளார். வங்கி மோசடி வழக்கு தொடர்பாக இவரது வீடு மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், மகன் உள்ளிட்ட அனைவரது வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்த ரெய்டானது அதிகாலையிலேயே ஆரம்பித்துள்ளதால் தற்போது வரை இது ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
ரெய்டு முடியும் பச்சத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்க பட்டதா, இவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரிய வரும். தற்பொழுது இவரது திருச்சி வீட்டை சோதனை செய்து வருகின்றனர். இவரது ஆதரவாளர்கள் எனது வீட்டை சூழ்ந்துள்ளதால் அவ்விடம் பரபரப்பாக காணப்படுகிறது. மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து வருவதாலும் , மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாலும் இவர்களை பழி வாங்க மத்திய அரசு இப்படி ரெய்டை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறது என விர்சனங்களை முன் வைக்கின்றனர்.
எங்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் , மேற்கொண்டு நிர்வாகிகளுக்கு இடையூரு கொடுக்கவும் இப்படியான அழுத்தத்தை மத்திய அரசு ஏற்பாடு செய்கிறதாம். இதன் மூலம் அவர்கள் மேல் நாம் வகைக்கும் எதிர்ப்புக்கள் மறைக்கப்பட்டு விடும் என எண்ணுகின்றனர், ஆனால் திமுக இதன் எந்த வலையிலும் சிக்காது என தொண்டர்கள் கூறி வருகின்றனர்.