இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. 40 பக்கங்கள் கொண்ட உரையை ஆளுநர் வாசிக்க அதனை சபநாயகர் அப்பாவு மொழிப்பெயர்த்தார். இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் இருந்த தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது, திராவிட மாடல், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ஆளுநருக்கு எதிராக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரின் பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆளுநர் உரை என்பது ஆண்டு தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள், கொள்கைகள் குறித்து விளக்க வேண்டும் சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை. ஆளுநரின் உரை ஆளுகட்சிக்கு சபாஷ் போடுகிறது.
ஆளுநர் உரையில் தவிர்த்த வார்த்தைகளை பற்றி தனக்கு தெரியாது எனவும் ஆளுநர் உரையை கேட்க வந்தோம் முதல்வரின் உரையை இல்லை என அவர் தெரிவித்தார். அது மட்டுமின்றி ஆளுநரை அமரவைத்து கொண்டு முதல்வர் பேசிய மரபுக்கு எதிரானது என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டதுடன் போதைபொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.