ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணியானது கட்டாயத்தினால் இணைக்கப்பட்டது என்று ஆளும் கட்சியானது பல்வேறு கருத்துகளை கூறியது. அதிலும் குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசியபோது, எடப்பாடி-யாரின் சம்மந்தியார் 750 கோடி ஊழலில் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்கவே டெல்லிக்கு எடப்பாடி ஓடோடி சென்று கூட்டணிக்கு ஒப்பந்தம் தெரிவித்ததாக கூறியிருந்தார்.
இப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை வைத்துள்ளதாக கூறி வருகின்றனர். அதிலும் திமுக மீது அதிருப்த்தி நிறைந்த கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கூட்டணியில் தேமுதிக வைக்கும் ஒரே கோரிக்கை எம் பி சீட் வேண்டும் என்பதுதான், அதனை கொடுத்து விட்டால் கூட்டணி உறுதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இது ரீதியாக தொடர்ந்து தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல சீமானிடமும் எடப்பாடி நெருக்கம் காட்டி வருகிறார். அதாவது மக்கள் ஓட்டை சிதறவிடாமல் கூட்டணிக்குள் இணைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தை எடப்பாடி கையில் எடுத்துள்ளார். இதனால் ஒவ்வொரு கட்சியினரிடமும் அதன் தேவையை கேட்டு ஆலோசனை செய்து வருகிறார். இந்த லிஸ்டில் பாமக மற்றும் தவெக- மட்டும் தான் விடுபட்டுள்ளது. ஏனென்றால் பாமாவின் மொத்த செல்வாக்கும் பாஜக – வால் அதன் பெயர் மாறிவிட்டது என்று ராமதாஸ் முழுமையாக எண்ணுகிறாராம்.
இதனை மீட்டெடுக்க திமுக வுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறுகின்றனர். ஆனால் அவரது மகனை வைத்து கட்சிக்குள் இழுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதேபோல விஜய்யுடனும் பாஜக அறியாத முகங்கள் வைத்து பேச முயற்சிப்பதாகவும் கூறுகின்றனர். அந்தவகையில் தேர்தல் நெருங்கும் சமயத்திலேயே அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து தெரியவரும்.