நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

Photo of author

By Sakthi

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

Sakthi

Updated on:

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!
நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல மெத்தனால் கலந்த விஷச்சாராயம் எனவும் இது தொடர்பாக பல நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பாதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த கள்ளச்சாரயத்தை ஒழிக்க தமழக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருள் பழக்கங்கள், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி தமிழக ஆளுநர் ரவி அவர்களிடம் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மனு அளிக்க உள்ளார். எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று மனு அளிக்கவுள்ளார்.