ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

Photo of author

By Rupa

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

Rupa

ராமாயணத்தில் வாலியின் நெகட்டிவ் கேரக்டர் வில்லன் போல தான் எடப்பாடி பழனிச்சாமி – டிடிவி தினகரன்!!

“கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் குறித்து வெளிவருவது தமிழகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் நல்லதல்ல அது வேட்க கேடான விஷயம் அதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்”

*”ஜெ.மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ளவர்கள் தான் காரணம், அவர்கள் தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்தார்கள் மீண்டும் மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் தான் பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் இணைய முடியும் என டி.டி.வி தினகரன் பேட்டி.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர்.

அதிமுக பொதுச்செயலாளராக நீதிமன்ற தீர்ப்பின் படி இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார், இதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் பார்க்கலாம் என்று கூறிய அவர் எடப்பாடி, ஓ.பி.எஸ் இடையே நடந்து வருவது ஒரு நீண்ட நெடிய சட்ட போராட்டமாக இருக்கும் என்று கூறிய அவர் இரட்டை இல்லை பலவீனம் ஆகி கொண்டு இருப்பதாகவும் எடப்பாடி துரோகத்தின் மூலம் பதவியை பிடித்து உள்ளதாகவும்,துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை, எம்ஜிஆருக்கு ஏற்பட்ட துரோகத்தால் தான் அதிமுகவை தொடங்கினார்.

அந்த கட்சியில் துரோகத்தால் தலைமைக்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.அதற்கு பதில் வரும் காலத்தில் பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என்று விமர்சனம் செய்த டிடிவி தினகரன் ராமாயணத்தில் வாலி என்பவர் நெகட்டிவ் கேரக்டர் தான், அந்த வாலி என்ற வில்லன் போல் தான் பழனிச்சாமி எனவும் எடப்பாடி வாலி போல் 2 முறை வெற்றி பெற்றுள்ளார் இனிமேல் அப்படி‌ வெற்றி இருக்காது என்று கூறினார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இணைக்க வேண்டும் என்றால் அது மத்தியில் உள்ளவர்கள் தான் முடியும். உயர்நீதிமன்ற தீர்ப்பு பன்னீர் செல்வம் பின்னடைவு இல்லை, இன்னும் நீதிமன்ற மேல் முறையீடு, தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகள் உள்ளன என்றார் என தினகரன் கூறினார்.

சென்னை வரும் பிரதமரை தான் சந்திக்க உள்ளேன் என்பது பொய் என்றார் தினகரன்.

மேலும் பேசிய அவர் அதிமுக பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது, நாங்கள் எந்த கூட்டணியில் வைப்போம் என்பது தேர்தலுக்கு முன்பாக அறிவிப்போம் எனக் கூறிய அவர் எடப்பாடி கட்சியை கைப்பற்றி வைத்துள்ளார், பண பலம், ஆட்சியில் இருந்ததால் வந்த செல்வாக்கு என்றும் அவர் எந்த நாளும் எம்.ஜி.ஆர், ஜெவாக ஆக முடியாது அதிமுக எடப்பாடி என்ற சிக்கி தவித்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஒருபோதும் தமிழக மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தயிருக்கு நஹி என்று சொல்வதுதான் தமிழர்கள் எனக் கூறிய அவர் கலாச்சேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் குறித்து வெளிவருவது தமிழகத்திற்கும் அந்நிறுவனத்திற்கும் நல்லதல்ல அது வேட்க கேடான விஷயம் அதை தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என்றும் இந்த விடியல் ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை பால் விநியோகம் சரியாக நடக்கவில்லை என்ன குற்றம் சாட்டினார்….

 

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பழங்குடியினர் பல்வேறு இடங்களில் அனுமதிக்கபடவில்லை. நேற்றைய தினம் கூட ரோகிணி திரையரங்கில் நடந்த செயல் குறித்த முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இதுபோன்ற காட்டுமிராண்டி தனமான செயல்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்தியில் ஆள்பவர்கள் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள் அவர்கள் தான் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் இணைந்து வைத்தார்கள்.

மீண்டும் அவர்களை மத்தியில் இணைத்து இருப்பவர்கள் கூட இணைக்கலாம் என்றும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களின் உயிருடன் விளையாடாமல் ஆளுநர் எந்த காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றி தர உதவ வேண்டும் என வலியுறுத்திய அவர் இபிஎஸ், ஓ.பி.எஸ் இணைப்பு பற்றி சசிகலாவிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.