திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!

0
243
#image_title

திருவிழா போல் காட்சியளித்த எடப்பாடி பழனிச்சாமி இல்லம்!! ஆடு நாட்டுக்கோழியுடன் தட்டு தட்டாய் சீர்வரிசை கொடுத்த மாஜி அமைச்சர்!!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தனது சொந்த ஊரான சேலம் சென்றுள்ளார்.அங்கு கட்சி நிர்வாகிகள் கடல்ப்போல் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனால் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடியின் இல்லம் திருவிழா போல் காட்சியளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக தொண்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிக்க சேலம் வந்துள்ளார்.மேலும் ஆடு,நாட்டுக்கோழி,பழங்கள் என வகை வகையாய் சீர்வரிசை பொருட்களுடன் சிறப்பித்துள்ளார்.

இதை தொடர்ந்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் கூட்டுறவு இளங்கோவன் ஈடுபட்டார்.மேலும் கட்சியினரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுப்பி வைத்தார்.

அனைத்து விஷயத்திலும் சிறப்பாக செயல்படும் சி.விஜயபாஸ்கர் அதிமுக தொண்டர்களை திரட்டிக்கொண்டு சேலம் வந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கட்சியினரின் மனதை கவர்ந்தார்.

புதுக்கோட்டையிலிருந்து சென்னையைவிட,சேலம் பக்கம் என்பதால் தொண்டர்களை அழைத்து வந்திருக்கிறார்.

Previous articleரிசர்வ் வங்கி இரண்டு நாள் கூட்டத்தில் எடுக்ப்போகும் முக்கிய முடிவு!! மீண்டும் வட்டி உயர்வு!!
Next articleநாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!