கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

Photo of author

By Ammasi Manickam

கால்வாய்களைப் புனரமைக்கும் நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற உறுதி கூறிய தமிழக முதல்வர்

Ammasi Manickam

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

தமிழக அரசின் சார்பாக ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு ரூபாய் 53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ரூபாய் 97.85 கோடி மதிப்புள்ள 15- க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தமிழக முதல்வருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்களைப் புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. வேளாண்துறைக்குத் தண்ணீர் முக்கியம் என்பதால் அதைச் சேமிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக கிடைக்கும் வண்டல் மண் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் விவசாயிகளின் நலன் கருதி குண்டாறு வழித்தடத்திலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.