சசிகலாவின் தயவால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவிற்கு ஆதரவாக மாறினார். இதனால் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார். குறிப்பாக அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களை மத்திய அரசு மிரட்டியே காரியம் சாதித்து வருவதாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் அடிக்கடி சொல்லி வந்தார்.
2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுன் கூட்டணி வைத்தார் பழனிச்சாமி. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக மாறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலுமே அதிமுக தோல்வி அடைந்தது.
ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க ‘இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்தார் பழனிச்சாமி. ஆனால், இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதுவும், இந்த கூட்டணியில் பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூட அமித்ஷா சொல்லவில்லை. தேர்தல் முடிவுக்கு பின் அதுபற்றி யோசிப்போம் என்றே சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், சூழ்நிலை காரணமாக அப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டோம். இப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமில்லை. அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவர் பேசிய வீடியோவை இப்போது சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ’இப்படி பேசிய பழனிச்சாமி இப்போது எப்படி மாறிவிட்டார்’ என பதிவிட்டு வருகிறார்கள்.
Memories:
😀😀😀😀😀😀pic.twitter.com/vDB2gROdlY
— Blue Sattai Maran (@tamiltalkies) April 11, 2025