ஆறு பால் ஆறு சிக்ஸ்! தூள்கிளப்பும் எடப்பாடியார்!

0
81

ஸ்டாலின் போடும் பந்தசல எந்தவிதமான நண்பர்களாக இருந்தாலும் சரி அதனை சிக்சர்களாக மாற்றி வருகின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

தமிழக சட்டசபையில் இன்றைய தினம் விதி எண் 110ன் கீழ் விவசாயிகளுடைய கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக, 16.4 மூன்று லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பை தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தார் ஆனாலும் தேர்தல் வருவதற்கு முன்னரே அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடைமுறைப்படுத்திக் காட்டி விட்டார். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஸ்டாலின் தெரிவிப்பது தான் நடக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ முதலமைச்சர் ஸ்டாலின் போடும் அனைத்து விதமான பந்துகளையும் சிக்சராக அடித்து நொறுக்கி வருகிறார். இதன் காரணமாக, தற்சமயம் ஸ்டாலின் உச்சத்தில் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார். முதலமைச்சர் நடவடிக்கையின் காரணமாக, ஸ்டாலின் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருக்கின்றார் என்று தெரிவித்தார் .அதோடு திருவிளையாடல் படத்தில் தருமி சிவபெருமானை நினைத்து புலம்புவதை போல ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு.