அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

Photo of author

By Vijay

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

Vijay

அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது எடப்பாடி பழனிசாமி !!

தொண்டர்களால் வளர்க்கப்பட்ட கட்சி என எடப்பாடி பேச்சு.

அதிமுக தொடங்கப்பட்ட போது எம்ஜிஆர் பொது செயலாளராக இருந்து வந்தார், அவரது மறைவிற்கு பின் ஜெயலலிதா பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பின்னர், பொது செயலாளர் பதவி யாருக்கும் தரப்படாமல் புதிதாக இரண்டு பதவிகள் உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எடப்பாடிக்கும், பன்னீருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகின்ற சூழ்நிலை உருவானது, இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய எடப்பாடி, கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தன்னுடைய ஆதரவாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம், அன்றிலிருந்து இன்றுவரை எடப்பாடியின் இந்த முடிவுக்கு தடை போடும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார்.

பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை பயன்படுத்திய எடப்பாடி, பொது செயலாளர் தேர்தல் நடத்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினார், இதனை தொடர்ந்து இந்த நிகழ்வுகள் குறித்து கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்பது மிகப்பெரிய ஆலமரம் அந்த ஆலமரத்தை யாராலயும், எவனாலயும் அசைக்கவோ ஆட்டவோ முடியாது, இந்த இயக்கம் முழுக்க முழுக்க தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, இங்கு தொண்டர்களுக்கு தான் முக்கியத்துவம் உண்டு.

தானும் ஆரம்பத்திலிருந்து தொண்டன் தான் என கூறி வருவதாகவும், அந்த தொண்டர்கள் இன்றி நான் மட்டுமல்ல வேறு எவரும் கட்சிக்குள் தனி நாட்டாமை செய்ய முடியாது, இனி அதிமுகவில் தன்னை போன்ற சாதாரண தொண்டன் தான் ஆள முடியும்,தொண்டர்கள் ஆதரவு இன்றி இனி கட்சியில் யாரும் உயர் பதவிக்கு வர முடியாது, ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் இனி ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.