அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?

0
123

சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அடுத்த 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுவரையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதோடு இந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் அதிகாரம் தொடர்பான விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது அதிமுகவின் நிர்வாக ரீதியான அனைத்து பொறுப்புகளையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை கொண்டிருப்பவர் பொதுச்செயலாளரே என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தமிழகத்தில் இருக்கின்ற அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

துணை பொது செயலாளர் நியமனம் செய்யும் அதிகாரம் அவைத்தலைவர் பொருளாளர் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரை கொண்ட செயற்குழுவை பொதுச்செயலாளருக்கு மட்டுமே அமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுதல் உட்கட்சி தேர்தலை நடத்துதல் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளை பொதுச்செயலாளர் மேற்கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

சட்ட விதிகளை மீறும் நிர்வாகிகளை நீக்குவதற்கோ, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கோ, பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடாத சமயங்களில் நிகழ்ச்சிகள் கொள்கை திட்டம் தொடர்பாக முடிவு எடுக்கும் முழுமையான அதிகாரம் பொதுச்செயலாளருக்கு உண்டு என சொல்லப்படுகிறது.

தேவையைப் பொறுத்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ, பொதுச்செயலாளருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கும் படிவத்தில் கையெழுத்திடுவதற்கு பொதுச் செயலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுகவில் பெண் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் அதிமுகவின் பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.

Previous articleமீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!
Next articleமேல்மருவத்தூர் அருகே நடைபெற்ற கோர விபத்து! அதிமுகவை சார்ந்த 10 பேர் படுகாயம் பொதுக்குழுவிற்கு சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!