மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!

0
231

மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்? பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல்!!

போரின்போது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பல வெடிபொருள்களை ரஷ்யா உக்ரைன் மீது செலுத்தி வந்தது. இதனால் உக்ரைனின் பெரும்பாலான நிலப்பரப்புப் பகுதிகளில் தற்போது ரஷ்யா படைகள் உபயோகித்த வெடிபொருள்கள் மற்றும் வெடிபொருள் சாதனங்கள் நிரம்பியுள்ளன.உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா படைகள் ராணுவ தாக்குதல்களில் ஈடுபட்டது.

20 க்கும் மேற்பட்ட பீரங்கிகள், ராணுவ மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷ்யா படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது ரஷ்யா படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒரு பகுதி இடிந்து விழுந்தது . இந்த கொடூர தகவலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் பரிதாபமாக இறந்தார்கள் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகின்றனர்.

Previous articleபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கை!
Next articleஅதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி! அதிகாரங்கள் என்னென்ன?