கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

0
249
#image_title
கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி! 
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதுமே அங்கு ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வந்தன. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக படு மும்முரமாக செயல்பட்டு, அதற்கேற்றால் போல தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்தது.
இதனிடையே கர்நாடக பாஜக முன்னனி தலைவரான ஜெகதீஸ் ஷெட்டருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். ஜெகதீஸ் ஷெட்டரின் விலகல் பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் கர்நாடக மாநிலத்தில் கூட்டணியில் உள்ள அதிமுக இம்முறை தேர்தலில் போட்டியிட தங்களுக்கு 4இடங்கள் கேட்ட நிலையில், அதற்கான வாய்ப்பை பாஜக மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அதிமுகவின் ஆட்சி மன்ற குழு இன்று கூடி கர்நாடக மாநிலத்தில் பெங்களூரூ அருகே உள்ள புலிகேசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போவதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் இந்த செயலால் கர்நாடக மாநிலத்தில் பாஜக – அதிமுக  கூட்டணியில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இனி கர்நாடகத்தில் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் நிலவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Previous articleசாராயம் கஞ்சாவிற்கு புகழ்பெற்ற கிராமம் – கண்டுகொள்ளாத காவல்துறை 
Next article14 வயது சிறுமி கர்ப்பம் – கருவை கலைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!