ADMK: கடந்த ஒரு மாதத்திற்கு முன் எடப்பாடிக்கு அத்திக்கடவு வழக்கு ரீதியாக பாராட்டு விழா நடத்தினர். அந்நிகழ்ச்சியில் இருந்து தான் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கிடையே பனிப்போரானது அதிகரிக்க தொடங்கியது. இதில் செங்கோட்டையனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவருக்கு பின் வந்த அமைச்சர்களுக்கு இடம் கொடுத்தது தான் பெரிய சிக்கல். ஆனால் எடப்பாடியும் இதனை சரிகட்டும் நோக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை.
இதற்கு உதாரணமாக தற்பொழுது அதிமுக வில் காணொளி வாயிலாக கட்சி மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். இதில் அனைவரிடம் கலந்தாலோசித்த எடப்பாடி, செங்கோட்டையனை மட்டும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர் எடப்பாடியின் குரலுக்காக காத்திருந்துள்ளார். இதன் மூலமாவது மீண்டும் இணைந்து விடலாம் என்ற முனைப்போடு இருந்தபோது அதற்கு சிறிதும் கூட எடப்பாடி முட்டுக் கொடுக்கவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடியும் போது மட்டும் செங்கோட்டையின் பெயரை எடப்பாடி தெரிவித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற செங்கோட்டையன் சீனியர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஸ்டாலினையும் சந்தித்துள்ளார். இதில் திமுக சார்பாக இவருக்கு நல்ல சலுகை கொடுத்துள்ளார்களாம். நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்து விட்டால் உங்களுக்கு உரிய தகுதி குறிப்பாக அமைச்சர் பதவி கூட தருவதாக தெரிவித்துள்ளார்களாம்.
ஆனால் செங்கோட்டையன் இதற்கு விருப்பம் ஏதும் தெரிவிக்காமல் காலம் எப்படி நகர்கிறது என்று பார்க்கலாம் என கூறிவிட்டாராம், அதற்கு முக்கிய காரணம் சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றுவது எனக் கூறுகின்றனர். இதுகுறித்து சீனியர்களுடன் நடத்திய மீட்டிங்கில் வெளிப்படையாகவே பேசி உள்ளாராம். எடப்பாடியை புறக்கணிப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் படி தான் தற்பொழுது மாஜி அமைச்சர் வேலுமணி இல்ல திருமண விழாவில் கூட எடப்பாடிக்காக காத்திருகாமல் உடனடியாக சென்று விட்டார். அதிமுக வழக்கு தற்பொழுது ஓபிஎஸ் க்கு சாதகமாக அமைவதாக இருப்பதால் இவர்கள் மூலம் கூட மற்றொரு கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.