தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கியுள்ளார்.
தற்போது மின்சார சட்டதிருத்த மசோதாவை கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மசோதா குறித்து முன்பே அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்டது. அப்போதே விவசாயம் மற்றும் ஏழை மக்களுக்கான மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்த மத்திய எரிசக்திதுறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்’கை முதல்வர் வரவேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். இந்த விசயத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க வழிவகை செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.