சாலை அமைக்க தமிழக மக்கள் தானாக மனமுவந்து நிலத்தை அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோள்
தரமான சாலை திட்டங்களுக்காக மக்கள் தானாக மனம் உவந்து அவர்களது நிலத்தை அளிக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ.24 கோடி மதிப்பில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பேசிய முதல்வர், இந்திய அளவில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே உள்கட்டமைப்பு வசதியில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் தொழில் சிறக்கவும் சாலை மேம்பாடு மிகவும் முக்கியம் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தேவைப்படும் இடங்களில் பாலங்கள், புறவழிச் சாலைகள் அமைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் கூறினார். மேலும் தமிழகத்தில் குடிமராத்துப் பணிகள் விவசாயிகளின் உதவியுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
மக்கள் தானாக மனமுவந்து இடம் தந்ததால் தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். மேலும் ஓமலூர் – மேட்டூர் இடையேயான ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், சேலம் உருக்காலை வளாகத்தில், ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களும் எதிர்க்கட்சிகளும் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும்,போராட்டங்கள் நடத்தினாலும் சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச் சாலையை அமைப்பதை உறுதி செய்வது போல அமைந்துள்ளது என்று முதலமைச்சரின் பேச்சு குறித்து கூறப்படுகிறது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.