எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி!

Photo of author

By Rupa

எடப்பாடி பதவி தற்காலிகமானது! ஸ்டாலினின் பகிரங்க பேட்டி!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மணமக்களை வாழ்த்தினார்.மேலும்  அங்குள்ள செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது, இரு தினங்களுக்கு முன்பு இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி அவர்கள் திமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் பேசி வருவதாக கூறினார். அவ்வாறு யாரும் திமுக எம்எல்ஏக்கள் அவரிடம் பேசுவதில்லை.

சொல்லப்போனால் அதிமுக எம்எல்ஏக்களே அவரிடம் பேசுவதில்லை. அதுமட்டுமின்றி எடப்பாடி யின் பொய் பிரச்சாரத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை.அதற்கான  நேரமும் இல்லை. அதிமுக கட்சியானது தற்போது பிளவு பட்டுள்ளது. எடப்பாடி பதவியும் தற்காலிகம் தான். காலை இரவு என்று நேரம் பார்க்காமல் நொடிக்கு நொடி முதலமைச்சராக இருக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.