BJP AMMK: தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக ஒன்றினைந்துள்ளது இதன் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டுமென்றால் கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்பதை எடப்பாடி தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார். அதேபோல அண்ணாமலை நீக்கிய பிறகு இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது. இப்படி இருக்கையில் தனியார் ஊடகத்திற்கு அண்ணாமலை, டிடிவி தினகரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் உறுதி அளித்தது குறித்துதான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். முதலில் டிடிவி தினகரனை நோக்கி அண்ணாமலை, உங்களை அன்புடன் வரவேற்கிறேன் என கூறினார். பின்பு மருத்துவமனை முன்பதிவு செய்தது குறித்து பேசினார். மேற்கொண்டு நீங்கள் சிறந்த மனிதர் இது அனைத்தும் எங்களுக்கு தெரியும், நீங்கள் அரசியல் ரீதியாக எதிர்பார்க்கும் அனைத்து மாற்றங்களும் கட்டாயம் நிகழும் என்று உறுதியளித்துள்ளார். இப்படி அண்ணாமலை உறுதியளிக்கின்றார் என்றால் கட்டாயம் பின்னணியில் ஏதோ ஒரு திட்டம் இருக்கும்.
அதிமுக கட்டாயம் கூட்டணியில் தினகரனை ஏற்றுக் கொள்ளாது. மாறாக பாஜக இவர்களுடன் கூட்டணி வைக்கப் போகிறதா?? என்பது குறித்த பேச்சானது தற்போது உள்ளது. அதேபோல மற்றொரு பக்கம், பாஜக அதிமுகவில் மீண்டும் கூட்டணி வைக்குமென்றால் கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிய பிறகுதான் என கூறியிருந்தார். காலப்போக்கில் அந்த மாற்றம் ஏதேனும் நிகழுமா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் தற்காலிக சூழலில் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவது உறுதி எனக் கூறுகின்றனர்.